நாடோடிகள்

பிறந்ததற்கும் இறக்க போவதற்கும் நடுவில் ஒரு பயணம்

திரை விமர்சனம்: தந்தை, பேய், காதலன் August 15, 2011

Filed under: உள்ளூர் கொட்டகை — நாடோடிகள் @ 5:50 am

இந்தியர்கள் அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள்

நாம்பளும் எழுதி ரொம்ப நாள் (வருஷம் )ஆச்சே.ன்னு வந்தேன்…வழக்கம் போல நமக்கு பிடிச்ச சினிமா.ல இருந்து ஆரம்பிப்போம். ….சமீபத்தில நான் பார்த்த சினிமாக்களின் ஒரு குறு விமர்சனம்….

தெய்வதிருமகள் 

அப்பா எனும் குழந்தைக்கும் மகள் எனும் மனுஷிக்கும் இடையில் ஏற்படும் சட்ட போராட்டம் தான் கதை. விக்ரம் மற்றும் சாரா தான் படத்தின் உயிர் நாடிகள்…பிரமிக்க வைக்கும் நடிப்பு …..அனுஷ்காவிற்கும் வித்தியாசமான பிரேக் எடுத்த ஒரு அனுபவம்  இருந்து இருக்கும் (நமக்கும் தான்) ..சந்தானம் பாதி படம் முழுவதும் வரக்கூடிய வாய்ப்பு…நன்றாக உபயோக படுத்தி இருக்கிறார்..

ஹிட்டு: விக்ரம், சாரா, சந்தானம், அனுஷ்கா, இசை, ஒளிப்பதிவு

குட்டு: M S பாஸ்கர் சந்தேகப்படுவது,அவர் பின்னாடி மனம் மாறுவதற்கு காரணம் சொல்லாதது…தேவை இல்லாத அனுஷ்கா பாடல்….

கேள்வி: மனம் வளர்ச்சி குன்றிய ஒருவர், அவரின் குழந்தைக்காக இப்படி ஒரு முடிவை எடுக்க முடியுமா? (ரொம்ப நேரம் இந்த கேள்வி தோன்றி கொண்டே இருந்தது )

ONELINER: தந்தை எனும் தெய்வத்தை கண்ட பரவசம்

காஞ்சனா 

பேய் படத்தில் காமெடி-யை சேர்த்து அதில் முடிஞ்ச அளவு வெற்றியும் அடைந்து இருக்கிறார், ராகவா லாரன்ஸ். காஞ்சனா எனும் திருநங்கை, அரசியல்வாதி ஒருவரால் கொல்லப்பட, அவர் பேய் என்றாலே பயப்படும் நாயகன் உடலில் புகுந்து எப்படி பழி வாங்குகிறார் என்பது தான் கதை. (முனி 1 தொடர்ச்சி) . சுவாரஸ்யமான களம். அடித்து ஆடி இருக்கிறார்….

ஹிட்டு: சரத்குமார், திருநங்கை களம் & நகைச்சுவை (கோவை சரளா, ஸ்ரீமன் & தேவதர்ஷினி கூட்டணி)

கொட்டு: எல்லாரோட இடுப்பில ஏறுவது (தேவையா? ) , நிறைய லாஜிக் இடறுகள், அதிக “கதாநாயக” தனம், ஓவர் டோஸ் நடிப்பு (ராகவா)

கேள்வி: காஞ்சனா எனும் ஒரு கதாபாத்திரமே போதுமே? எதற்கு தேவை இல்லாமல், பாய் மற்றும் அவரின் பையன்? ராகவா “அந்நியன்” நடிப்பை காட்டவா?

ONELINER: சிரிப்பு பேய் (சிரிப்பு போலீஸ் மாதிரி )

நூற்றிஎண்பது
நூற்றிஎண்பது நாட்களில்,  தமிழ் சினிமாவின் பரம்பரை நோயான புற்று நோயால் இறக்கபோகும் ஒரு அமெரிக்க டாக்டரின் கதை. ஒரு த்ரில்லர் படம் போல, நாயகன் பற்றி ஒன்றுமே தெரியாமல் (நாயகி போல) நாமும் பயணிக்க வேண்டியதாக இருக்கிறது….வித்தியாசமான திரைகதை ..அமெரிக்க டாக்டர், சென்னை பத்திரிக்கை போட்டோகிராபர், அமெரிக்க தமிழ் பெண் என ரசிக்கும் படியாகவே இருந்தது….. முடிவில் மட்டும் டைரக்டர் கொஞ்சம் குழம்பி (ஏர்போர்ட்.க்கும் ஹோட்டலுக்கும் நடுவில் சுத்த வைக்கிறார் கதை மற்றும் நம்மையும் சேர்த்து) பிறகு காதாநாயகன் யாருக்கும் தெரியாமல் வேறு ஒரு நாட்டிற்கு செல்வது போல முடித்துவிட்டார்… காசியில், மனோ என்ற சிறுவனால் சாவை பற்றி பயம் விலகி எல்லாவற்றையும் தெளிவாக கதாநாயகன் கை ஆள்வதில் தொடங்கி, பின்னர், சென்னை தம்பதியருக்கு நெருக்கம் ஆகி, நியூஸ்பேப்பர் போடும் பையன்களுக்கு நல்லது செய்வது, சென்னை தோழிக்காக அமெரிக்கா வரை சென்று சிகிச்சை எடுப்பது…நடுவில் தனது கதையை நமக்காக rewind செய்வது என மிக வித்தியாசமான ஒரு கலவை….ரசிக்க வேண்டிய படம் தான்…

ஹிட்டு: சித்தார்த், மிக அழகான ஒளிப்பதிவு, இசை, கதாநாயகிகள், நல்ல திரைக்கதை..

கொட்டு: எனக்கு ஒரு குறையும் தெரிய வில்லை…நகைச்சுவை இல்லாதது ஒரு குறையோ?

கேள்வி: ஏன் இந்த படம் பேசப்படவில்லை? (OR ஓடவில்லை? )

ONELINER: அமைதியான வித்தியாசமான ஒரு கவிதை

 

அஞ்சலி: கொச்சின் ஹனீபா February 3, 2010

Filed under: அஞ்சலி — நாடோடிகள் @ 2:29 am

நேற்று இரவு தான் “மோதி விளையாடு” வில் இவரின் காமெடி நடிப்பை பார்த்து கொண்டு இருக்கும் போது, இவரை பற்றி என்னுடைய கடந்த “நகைச்சுவை” பதிவில் குறிப்பிட வில்லையே என்று  யோசித்து கொண்டு இருந்தேன்….இன்று காலையில் இவரின் மறைவு செய்தி உண்மையில் என்னை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மிக சிறந்த நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகர்.

இவரின் ஆன்மா சாந்தி அடையட்டும்.

 

நகைச்சுவை நடிகர்கள் – இன்று…. January 28, 2010

Filed under: சினிமா அலசல்கள் — நாடோடிகள் @ 7:51 am

சினிமாவிலும் சரி, வாழ்க்கையிலும் சரி…யாரையும் அவ்வளவு சுளுவா சிரிக்க வச்சுட முடியாது….ஏன்னா, அது ரொம்ப ஈஸியான விஷயமும் இல்லை…சினிமாவில,  டணால் தங்கவேலு, கலைவாணர், சந்திரபாபு,  M R ராதா, நாகேஷ் என ஆரம்பித்து நமது தமிழ் திரை உலகம் நிறைய அறிவாளிகளை கண்டு இருக்கிறது. இவர்கள் தனக்கென ஒரு முத்திரையும் பதித்து, கூடவே குணசித்திரம் வேடங்களிலும் நடித்து  இன்று அளவும் மக்கள் விரும்ப கூடிய ஒரு இடத்தில இருக்கிறார்கள்…..

இன்றைய திரை உலகத்தில் நகைச்சுவை நடிகர்களின் பங்களிப்பு என்ன……இதோ………

  ரொம்ப நாளைக்கு கவுண்டமணி -செந்தில் அட்டகாசம் பண்ணிக்கிட்டு இருந்தாங்க….இவர்கள் பெயர் டைட்டிலில் வந்தாலே மக்கள் சிரிக்கும் அளவுக்கு….அப்பாலே, அந்த கூட்டணி போர் அடிக்க ஆரம்பிச்ச போது வந்தவங்க விவேக்கும் வடிவேலுவும் …..

 

விவேக் -  இன்னைக்கு செத்தா நாளைக்கு பால்-ன்னு சொல்லி, ஏகப்பட்ட முற்ப்போக்கு சிந்தனைகளை நகைச்சுவையாக சொன்னவர்…அப்துல் கலாம், பத்மஸ்ரீ, இப்படி பல விஷயங்கள்… ஆனா இப்ப அவருக்கு  – tonque-ல Saturday போல இருக்கு (அதான் நாக்குல சனி !!!). சொந்த செலவில சூன்யம் வச்சுகிட்டார். அவரே வச்சுகிட்ட அந்த ஆப்புல இருந்து எந்திரிக்க ரொம்ப காலம் ஆகும் போல இருக்கு. அதுவும் இல்லாம, அவரோட காமெடி கொஞ்சம் ஓவர்டோஸ்   ஆயிடுச்சு….

  

  வடிவேல் – ரொம்ப கஷ்டப்பட்டு, இன்னைக்கு ஒரு டாப் காமெடியனா இருக்கார்……இவரின், உடல் மொழியும் & மதுரை வட்டார பேச்சும் சாமானியன் முதல் சகலருக்கும் பிடித்து போனது…… வின்னர்- படம் ஒரு பத்து நாள் ஓடுச்சுன்னா அதுக்கு “கைப்புள்ள” தான் காரணம்..இந்த இம்சை அரசன், அவரின் ஒரே அடி வாங்கும் காமெடியை மாத்திக்கணும்…அவருக்கே தெரியும், மாற்றம் ஒன்று தான் மாறாமல் இருப்பது…. இப்போதைக்கு இவருக்கும் 7.30 time  ( AM or PM) போல…Income Tax raid, நண்பர்களிடம் ஏமாந்தது என கைப்புள்ள உண்மையாகவே அடி வாங்கி கொண்டு இருக்கிறார்…

இப்போதைக்கு நம்பிக்கை கொடுக்க கூடிய சில காமெடியன்களை பட்டியல் இட்டு இருக்கிறேன்… என்னால் முடிந்த வரை..

மயில்சாமி – எனக்கென்னவோ இவரை தமிழ் சினிமா இன்னும் முழுமையாக பயன்படுத்தி கொள்ளவில்லை என்று தோன்றுகிறது…. மிக இயல்பான முக பாவங்களுடனும், அட்டகாசமான சேட்டைகளுடன் காமெடி பண்ணக்கூடியவர். சரியான முழு வாய்ப்பு கொடுத்தல் பின்னி பெடல் எடுக்க கூடியவர்…

  

M S பாஸ்கர் – சித்தி என்று ஒரு நாடகம் – நான் இவருக்காகவே இந்த நாடகம் பார்த்து இருக்கிறேன்…இவர் மேல் ரொம்பவே வெறுப்பு வருகிற அளவிற்கு வில்லனாக நடித்து இருப்பார்….அப்படி பட்டவர், எங்கள் அண்ணா, அழகியே தீயே, சாது மிரண்டா, வெள்ளி திரை படங்களில் தனது நகைச்சுவை திறமையை காண்பித்து இருப்பார் மொழி, அஞ்சாதே போன்ற குணசித்திர பங்களிப்பும் உண்டு ஆச்சர்யமான காமெடியன்…

  

  

சந்தானம்   – சமீப காலமாக கலக்கி கொண்டு இருப்பவர்…. சிவா மனசில சக்தி, கண்டேன் காதலை, பொல்லாதவன்  இந்த படங்கள் எல்லாம் உதாரணம்… ரெட்டை அர்த்த வசனங்கள் ரொம்ப நாளைக்கு உதவாது என்பதை புரிஞ்சுக்கணும்…. சிலம்பாட்டத்தில் இவரை யாரும் ரசிக்கவில்லை.

 

கஞ்சா கருப்பு – இவரும் கிராமத்து பாசையிலேயே கவர்கிறார். “நாடோடிகள்” படத்தில் இவருக்கு அடிக்கடி  விழுந்த கைதட்டுகளை பார்த்து ஆச்சர்யப்பட்டு இருக்கிறேன்….கொஞ்சம் கூடுதலாக கத்துவதை தவிர்க்கலாம்….

 டெல்லி கணேஷ்,இளவரசு, மனோபாலா, சார்லி, கருணாஸ் - போன்றவர்கள் இன்னும் ஒரு இடத்தில நிற்க வில்லை என்றாலும் ரசிக்க வைப்பவர்கள்

பரணி, வெண்ணிலா கபடி குழு- பரோட்டா நண்பர், ரேணிகுண்டா – நண்பன், பிரேம்ஜி, சிங்கமுத்து போன்ற புதியவர்களும் கவனிக்கப்பட வேண்டியவர்கள்…

நடிகைகளில் ஆச்சி, கோவை சரளாவிற்கு பிறகு கொஞ்சம் வெற்றிடம் தான்….ஆர்த்தி முயற்சிக்கிறார்….கவனிப்போம்…

யாரையாவது மறந்துட்டேனா?

கொஞ்சம் இத பாத்து சிரிச்சுட்டு, முடிஞ்சா எதாவது சொல்லிட்டு போங்க
 

3 இடியட்ஸ் – படமா? பாடமா? January 19, 2010

Filed under: உள்ளூர் கொட்டகை — நாடோடிகள் @ 5:24 am

____________________________________________________________________________________________________________________________

“கேபிள்களும்”, “இட்லி வடைகளும்” – ஆயிரத்தில் ஒருவனையும், குட்டியையும் “நாணயத்தோடு” பின்னி பெடல் எடுத்துகிட்டு இருக்காங்க..என்னடா இவன், இந்த நேரத்தில், இந்திரா காந்திய சுட்டுட்டாங்க ரேஞ்சுல எழுதறானேன்னு திட்டாதீங்க…நம்ம சாபக்கேடு..அப்படி ஒரு நாட்ல இருக்கேன்……இந்த பதிவையே ப்ராக்சி போட்டு தான் எழுத வேண்டியதா இருக்கு… நல்ல விஷயத்தை லேட்டா சொன்னாலும் தப்பு இல்ல…
____________________________________________________________________________________________________________________________

3 IDIOTS – Perfectionist அமிர்கான்-இன் அடுத்த சமுதாய பஞ்ச் . இவரின் ஆரம்பகால படங்கள் இவரை ஒரு Lover boy இமேஜ்-இல் தான் வைத்து இருந்தன… ஆனால் இவரின் சமீபத்து திரைப்படங்கள் அனைத்து தரப்பினரையும் கவர்வது மட்டுமின்றி, உலக அளவில் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்து இருக்கிறன. இவரது இந்த பயணம், லகானில் ஆரம்பித்தது என்று சொல்லலாம்…இத்தனைக்கும் இவர் இது வரை மொத்தமே ஒரு 50 படங்கள் தான் நடித்து இருப்பார்…..

3 IDIOTS – டேக் ஆப் ஆவதற்கு தயாராக இருக்கும் விமானத்தில், ஒரு போன் கால் வந்ததால் நெஞ்சு வலி வந்தது போல் நடித்து வெளியே வரும் நம்ம maddy மாதவனிடம் இருந்து இந்த கதை ஆரம்பிக்கிறது. அப்படியே பழைய உயிர் சிநேகிதனை தேடி சிம்லா-விற்கு செல்வதில் தொடர்ந்து, மாதவன் தங்கள் கல்லூரி வாழ்க்கையை நமக்காக அசை போடுகிறார்…….

பர்ஹான் (மாதவன்) , ராஜு ரஸ்டோகி (சர்மான் ஜோஷி) மற்றும் ரஞ்சோ (அமீர் கான்) – இவர்கள் மூவரும் ஒரே கல்லூரியில் இன்ஜினியரிங் படிப்பவர்கள். முதல் இருவர்கள் தங்கள் குடும்ப பிண்ணனி காரணமாக இங்கே படிக்க வர, அமீர்கானோ தனது லட்சியத்துக்காக படிக்க வருகிறார்..(இவருக்கும் ஒரு வித்தியாசமான பிண்ணனி இருக்கிறது..லாஜிக் தான் உதைக்கிறது). அமீர்கான் – ஒரு இயல்பான புத்திசாலி. இரண்டு விஷயங்களை மாற்ற நினைக்கிறார்….ஒன்று, வழக்கமான இந்திய கல்வி முறையில் ஊறி போய் இருக்கும் Professor – Viru saahashtraputte (செல்லமாக வைரஸ்) மற்றும் அவரது கல்லூரியின் வழக்கமான கல்வி முறையை மாற்றுவது…..மற்றும் நண்பர்களின் உண்மையான இலக்கினை அறிந்து, அதை நிறைவேற்றுவது (ஒருவர், Wild life Photographer- ஆக நினைக்கிறார்.. இன்னொருவரின் Attitude- ஐ மாற்றுகிறார்). நடுவில், professor மகளுடன் காதல். முடிவில் நண்பர்கள் சந்தித்தார்களா..காதலர்கள் சேர்ந்தார்களா… என்பதை காதல், செண்டிமெண்ட், கல்லூரி கலாட்டாக்கள் என்று கலவையாக காமெடி கட்டி அடித்து இருக்கிறார்கள்…. அசத்தி இருக்கிறார்கள்….

 

அமீர்கான் – ஒரு 44 வயது உடைய ஒருவர், Engineering கல்லூரி மாணவராக நடித்து இருக்கிறார்…ஒரு இடத்தில் கூட நமக்கு அது உறைக்கவில்லை..திரைக்கதை காரணமா….இல்லைஅவரின் இளமையான தோற்றம் காரணமா…தெரியவில்லை…..அதுவும், அந்த Machine பற்றிய வகுப்பில், ஏன் சிரித்துகொண்டு இருக்கிறாய் என்று professor கேட்பதற்கு, சிரித்துகொண்டே பதில் சொல்வது அவ்வளவு இயல்பான நடிப்பு…படம் முழுவதும் இவர் வரவில்லை என்றாலும், எல்லா காட்சியிலும் இவர் இருப்பது போன்றே ஒரு பிரமை… குறிப்பாக, “Aal izz Well” சொல்லும் அழகே தனி தான்

மாதவன் & ஷர்மன் ஜோஷி – மிக தேவையான இயல்பான நடிப்பு. தம்பி Maddy – அங்கேயே செட்டில் ஆகி எங்களை மறந்து விடாதீர்கள். வாட்டர் டாங்கின் அருகில், இரவில் குடித்துவிட்டு வீட்டில் போய் கலாட்டா செய்யும் காட்சிகளில் – மூவருமே உண்மையாகவே குடித்ததாக கேள்வி பட்டேன்…உண்மை தானோ? :-)

 

கரீனா கபூர் – வழக்கமான கதாநாயகி தான் என்றாலும், இவர் குடித்து விட்டு அமீர்கானை கலாய்ப்பது - செம காமெடி

   VIRUS – Bomin இராணி – ரொம்ப இயல்பான நகைச்சுவையுடன் மனுஷன் மெனக்கெட்டு இருக்கிறார்…அவரின் பாடி லாங்குவேஜ்-ம், மாடுலேஷன்-ம் பிரமாத படுத்தி இருக்கிறார்..

 

 

ஓமி வித்யா என்கிற Silencer – இவரை பற்றி கண்டிப்பாக சொல்லியே ஆக வேண்டும்… மனபாடம் பண்ணி பண்ணியே காலத்தை தள்ளும் ஒரு வழக்கமான engineering புத்திசாலி. அமீர்கான் சம்பந்தமே இல்லாமல் ஒன்றை எழுதி விட்டு, எல்லாரும் புத்தகத்தை refer பண்ணிக்கலாம் விடை கண்டுபிடிக்க என்று சொல்ல, மற்றவர்கள் அனைவரும் அவரவர் புத்தகத்தை உபயோகிக்க, இவர் மட்டும் அமீரின் புத்தகத்தை ஓடி சென்று எடுப்பது – அதிரடி சிரிப்பை தருகிறது. அதே போல், கல்லூரி விழாவில், professor-ஐ பாராட்டுவதாக நினைத்து கொண்டு பேசும் காட்சியில் – ஹிந்தி தெரியாதவர்கள் கூட விழுந்து விழுந்து சிரிப்பார்கள்….அப்படி ஒரு அட்டகாசமான நடிப்பு . இவர் அமெரிக்காவில் படித்த ஒரு டைரக்டர், எடிட்டர் என்றால் நம்ப முடிகிறதா…

இது போல, Javed Jaffery, மில்லிமீட்டர்-ஆக வரும் பையன், மாதவனின் அப்பா என எல்லாருமே அழகாய் நடித்து இருக்கிறார்கள்.

பாடல்கள் தனியாக கேட்டபோது அவ்வளவாக ஈர்க்க வில்லை. படத்துடன் பார்த்த போது பிடித்து இருந்தது. முரளிதரனாவின் ஒளிப்பதிவு மிக அருமை.

மிக நேர்த்தியான கதாபாத்திர தேர்வு, நகைச்சுவையுடன் கூடிய திரைக்கதை இவற்றுடன் மற்றுமொரு சமுதாய பொறுப்பினை காட்டி இருக்கிறார்கள்…வாழ்த்துக்கள்… (கால்சட்டையை கழட்டி சொல்லணுமா என்ன??) – AAL IZZ WELL

Taare Zhameen Par  - விழாவில் KB அவர்கள் அமீர்கானை அழ வைத்தது இங்கே:

 

எஸ். ஐ. படுகொலை: நீங்களும் நானும் ஒரு காரணம் தான். January 10, 2010

Filed under: சமுதாயம் — நாடோடிகள் @ 7:01 am

இந்த முதல் பதிவே ஒரு சோகமான தொடக்கமாக இருந்தாலும், இதை ஒரு விழிப்பு உணர்வாக எடுத்து கொள்ளுங்கள். மிக அதிகமான வாசிப்புகளுக்காக இந்த பதிவு எழுத படவில்லை. நாம் தொலைத்து விட்ட மனசாட்சியை கொஞ்சம் தேட முயற்சி  செய்து இருக்கிறேன்..நீங்களும் தேடுங்கள்…

இன்று காலை எழுந்தவுடன் இந்த செய்தி தான் அனைத்து வலை தளங்களிலும் பரவலாக தென்பட்டது.

திருநெல்வேலியில் திரு. வெற்றிவேல் எஸ். ஐ. படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பற்றி  தான் இங்கே சொல்கிறேன். நிச்சயமாக இந்த துயர சம்பவம் கண்டனத்துக்கு உரியது தான். அமைச்சராக இருந்தாலும் சரி, அரசாங்க அதிகாரிகளாக இருந்தாலும் சரி.

ஆனால், ஒரு நிமிடம் எல்லாரும் யோசிக்க வேண்டிய விஷயம் – இந்த நிகழ்வுக்கு சமுதாயமும் ஒரு காரணமே. சமுதாயம் என்பது நீங்களும் நானும் சேர்ந்தது தான். நாம் எல்லாருமே இன்று இப்படி தானே ஓடி கொண்டு இருக்கிறோம். இது வரை ஒரு முறையாவது நாம் இது மாதிரி ஒரு  விபத்தில் சிக்கியவருக்கு சிறு உதவி செய்து இருப்போமா…? எட்டி பார்த்து விட்டு உச் கொட்டி விட்டு ஓடுகிற கூட்டத்தில் தானே நாமும் இருக்கிறோம்…அரசியல்வாதிகளையும், அதிகாரிகளையும் சாடுவதை விட, நாம் நம்மை சரி படுத்தலே இது போன்ற கொடூரங்களுக்கெல்லாம் ஒரு சரியான விடையாக தோன்றுகிறது.

இது வரை எத்தனை அனாதை இல்லங்களுக்கு நாம் குறைந்தபட்சம் ஒரு நூறு ரூபாயாவது கொடுத்திருப்போமா? இல்லை ஒரு பிச்சைக்காரகளுக்கு ஒரு ரூபாயாவது போட்டு இருப்போமா? இங்கேயும், பிச்சைகாரர்களை வளர்க்க கூடாது என்று பேசி கொண்டு இருக்கிற கூட்டங்களில் ஒருவராகவே தான் நாம் இருக்கிறோம்,அதற்க்கு பதிலாக உணவை வாங்கி கொடுப்பது என்பது சிறந்த வேலை என்று தோணாமல்..

இதோ அனைத்து தொலைகாட்சிகள்  , பத்திரிகைகள் , ஏன் என்னுடைய இந்த இணையதளத்தையும்  சேர்த்து எல்லாரும் இதை எழுதி விட்டு மீண்டும் காணாமல் போய் விட போகிறோம்..

ஒரு கால் போய் விட்ட நிலையிலும், மரண வாயிலின் நின்று கொண்டு அவர் கேட்ட உதவிக்கு, கோல்டன் ஹவர் என்று சொல்ல படுகிற அந்த நேரத்தை தவற விட்டதற்கு இன்றைய சமுதாயமும் சேர்ந்து தலை குனிந்து கொள்ள வேண்டியது தான்.

அந்நியன் படத்தில் வருவதை போல எல்லாரும் இதை ஒரு சிறு தவறாக மட்டுமே நினைத்து கொண்டு இருப்பதால் தான், இன்னமும் இது போன்ற துயரங்கள் நடந்து கொண்டு இருக்கிறன…

இது ஒரு ஆள் மாறாட்ட படு கொலை என்பது கூடுதல் வேதனை.

இந்த சம்பவத்தின் காட்சிகள் மற்றும் படங்களை இங்கே போடாமல் இருப்பதே அவருக்கு மிக சிறந்த அஞ்சலியாக எடுத்து கொள்கிறேன்.

 

 
Follow

Get every new post delivered to your Inbox.